ஹவுரா ரயிலில் வட மாநிலங்களை சேர்ந்தவர்களால் பயணிகள் அவதி

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வட மாநிலங்களை சேர்ந்தவர்களால் பயணிகள் அவதி
திருச்சியில் இருந்து சென்னை வழியாக மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவிற்கு செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று திருச்சி ஜங் ஷன் ரெயில் நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக நின்று கொண்டி ருந்தது. அப்போது அந்த ரெயிலின் முன்பதிவில்லா பெட்டிகளில் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் சாரண-சாரணியர் வைர விழாவில் பங் கேற்று விட்டு தங்களது ஊருக்கு செல்வதற்காக பயிற்சியாளர்களுடன் ஏறி அமர்ந்து விட்டனர். இதனால் முன்பதிவில்லா பெட்டிகளில் டிக் கெட் எடுத்து விட்டு வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மொத் தம் உள்ள 4 பெட்டிகளில் 2 பெட்டிகளை வடமாநிலத்தினர் ஆக்கிர மித்து விட்டதால் மீதம் இருந்த 2 பெட்டிகளில் நெருக்கியடித்துக் கொண்டு ஏறினார்கள். இதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். இது பற்றி பயணிகளில் சிலர் கூறுகையில் முன்பதிவில்லா பெட்டிகளில் மொத்தமாக அவர்கள் ஏறுவதற்கு இப்படி திடீர் என அனுமதி வழங்கி இருக்க கூடாது என புகார் கூறினார்கள். மேலும் பெண்களுக்கான பிரத்யேக பெட்டியிலும் வட மாநிலத்தவர்களால் இதே போன்ற பிரச் சினை ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
Next Story