கோவை: ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது !

X
கோவை, கணபதி அருகே உள்ள மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (61). நஞ்சப்பா ரோட்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஆட்டோ ஸ்டாண்டில் காந்திபுரம் 100 அடி ரோடு முதலாவது தெருவைச் சேர்ந்த பரசுராமனும் (37) ஆட்டோ ஓட்டி வருகிறார். பரசுராமன், சீனிவாசனின் தங்கை மகன் ராஜனுடன் நண்பராக பழகி வந்துள்ளார். இது சீனிவாசனுக்கு பிடிக்கவில்லை. தனது தங்கையின் மகன் வாழ்க்கையை பரசுராமன் கெடுத்து விட்டதாக நினைத்த சீனிவாசன், இதுகுறித்து பரசுராமன் ஓட்டி வரும் ஆட்டோ உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதனால் பரசுராமனிடம் இருந்து ஆட்டோவை உரிமையாளர் திருப்பி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பரசுராமன், சீனிவாசனை கத்தியால் குத்தினார். வயிறு மற்றும் கண் கை உள்ளிட்ட பகுதிகளில் கத்திக் குத்து விழுந்தது. சீனிவாசனை அக்கம், பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டூர் காவல்துறையினர் நேற்று பரசுராமை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க உள்ளனர்.
Next Story

