மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி

X

சாலையில் படுத்து கிடந்த மாடு மீது மோதியதில் வாலிபர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக பலி
திருவெறும்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி தொண்டமான் பட்டியை சேர்ந்தவர் விக்டர் ஞானபிரகாசம். இவரது மகன் டேவிட் ராஜ் (வயது25). இவர் திருச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க் கெட்டில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். எழில் நகர் உய்யக்கொண்டான் கரையில் சென்றபோது, சாலையில் படுத்து கிடந்த மாடு மீது மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த டேவிட்ராஜ் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story