வானூா் அருகே தொழிலாளி மா்ம மரணம்

X
வானூா் வட்டம், குயிலாப்பாளையம், பிரதான சாலையைச் சோ்ந்த கமலக்கண்ணன் மகன் கலிவரதன் (51), தொழிலாளி. மதுப்பழக்கமுடைய இவருக்கு உடல்நலக் குறைவு இருந்து வந்ததாம்.இந்த நிலையில், இரவு கலிவரதன் வீட்டில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

