பைக் மீது காா் மோதி விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

X

காா் மோதி விபத்து: தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில், வெல்லூா், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் குணசேகரன் (51). திண்டிவனம் வட்டம், பாப்பூண்டியைச் சோ்ந்த சரவணன் மகன் புஷ்பராஜ் (26). இருவரும் திண்டிவனத்தை அடுத்த சலவாதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.இவா்கள் இருவரும் திங்கள்கிழமை திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனத்தை அடுத்த பட்டணம் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். புஷ்பராஜ் பைக்கை ஓட்டினாா்.அப்போது, பைக் மீது அந்தப் பகுதியில் வந்த காா் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துமனைக்கு செல்லும் வழியில் குணசேகரன் உயிரிழந்தாா். புஷ்பராஜ் சிகிச்சை பெற்று வருகிறாா்.இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story