சூலூர்: நான்கு மாத குழந்தை மூச்சு திணறி பலி !

X
சூலூர் அருகே அருகம் பாளையம் கிராமத்தில் கட்டிலில் தனது தாயுடன் படுத்திருந்த 4 மாத பெண் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகம்பாளையத்தைச் சேர்ந்த கைலாசபதி என்பவருக்கும் ரமாதேவி என்பவருக்கும் திருமணமாகி 4 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று இரவு ரமாதேவி தனது குழந்தையுடன் கட்டிலில் படுத்திருந்தார். குழந்தை அவரது அருகில் தூங்கிக் கொண்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து மெத்தையில் குப்புற படுத்திருந்தது. அதிகாலை ரமாதேவி கண்விழித்து பார்த்தபோது குழந்தை அசைவில்லாமல் கிடந்தது. உடனடியாக குழந்தையை சூலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் இறப்புக்கு மூச்சு திணறல் தான் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

