வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதில் இருந்த நகையை பறித்துச்சென்ற நபர்

வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதில் இருந்த நகையை பறித்துச்சென்ற நபர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் காதில் இருந்த நகையை பறித்துச்சென்ற நபர் கைது.. திம்மாம்பேட்டை காவல்துறையினர் நடவடிக்கை.. திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி அடுத்த சிக்கணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அம்சவேணி இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, இதனை அறிந்த நபர் ஒருவர், அம்சவேணி காதில் அணிந்திருந்த தங்க கம்மலை பறித்துச்சென்றுள்ளார், இதில் காது அறுப்பட்ட நிலையில், அம்சவேணியை அவரது உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் மேல்சிகிச்சையிற்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அம்சவேணி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்ட போது, திகுவாபாளையம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் அம்சவேணியின் காதில் இருந்த தங்க கம்பலை அறுத்துச்சென்றது தெரியவந்துள்ளது, உடனடியாக இன்று ராமனை கைது செய்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் அவர் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்..
Next Story