கஞ்சா கடத்தி வந்தவர்களை சினிமா பட பானியில் விரட்டி கைது செய்த போலீசார்

கஞ்சா கடத்தி வந்தவர்களை  சினிமா பட பானியில் விரட்டி கைது செய்த போலீசார்
X
பூந்தமல்லியில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 530 கிலோ குட்கா பறிமுதல் சினிமா பட பானியில் விரட்டி சென்று காரின் கண்ணாடியை உடைத்து கைது செய்த போலீசார்
பூந்தமல்லியில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 530 கிலோ குட்கா பறிமுதல் சினிமா பட பானியில் விரட்டி சென்று காரின் கண்ணாடியை உடைத்து கைது செய்த போலீசார் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா காரில் கடத்தி செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் பூந்தமல்லி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சொகுசு காரை மடக்கி சோதனை செய்ய முயன்ற போது காரில் வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் போலீசாரை இடிப்பது போல் வேகமாக சென்றதால் சுதாரித்து கொண்ட போலீசார் அந்த காரை சினிமா பட பானியில் விரட்டி சென்றனர் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று காரை மடக்கிய போது காரில் இருந்தவர்கள் இறங்காமல் இருந்ததால் போலீசார் அதிரடியாக காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த இரண்டு வட மாநில நபர்களை பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்டவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ்(32), ராவத்(37), என்பதும் ஆந்திர மாநிலம் புத்தூரில் தங்கி கொண்டு சொகுசு கார்களில் தடை செய்யப்பட்ட குட்காவை சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துக்கொண்டு சப்ளை செய்தது தெரியவந்தது இதையடுத்து சொகுசு கார் மற்றும் 530 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சினிமா பட பானியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் விரட்டி சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆட்டோவை ஓட்டிக் கொண்டே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story