கடம்பூர் மலைப்பகுதியில் மின்சாரம் சீராக வருவதில்லை விவசாயிகள் வேதனை

கடம்பூர் மலைப்பகுதியில் மின்சாரம் சீராக வருவதில்லை விவசாயிகள் வேதனை
X
கடம்பூர் மலைப்பகுதியில் மின்சாரம் சீராக வருவதில்லை விவசாயிகள் வேதனை
கடம்பூர் மலைப்பகுதியில் மின்சாரம் சீராக வருவதில்லை விவசாயிகள் வேதனை கடம்பூர் மலைக்கிராமங்களில் விவசாயம் மற்றும் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் வோல்டேஜ் சீரகாக வருவதில்லை உடனடியாக சரி செய்ய வேண்டும் மலைகிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சத்தி அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் விவசாய முக்கிய தொழிலாக விளங்குகிறது. இங்குள்ள குன்றி, குத்தியாளத்தூர் மாக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தோட்டத்து கிணறுகளுக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள மும்முனை மின்சாரம் சீராக வருவதில்லை, அடிக்கடி வோல்டேஜ் ப்ராப்ளம் ஏற்பட்டு சரியாக பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடிவதில்லை, இதனால் விளை பொருட்கள் தண்ணீர் இன்றி கருகுவதாகவும், போட்ட முதலீடு கிடைக்காததால் நஷ்டத்தில் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக விவசாயிகளும், வீட்டிற்கு ஒரு மின்சாரமும் இதே போல் போல் அடிக்கடி தடங்கள் ஏற்படுவதால் பள்ளி மாணவர்களின் படிக்க முடியாமல் சிரமப்படுவதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது கடம்பூர் மலை கிராமங்களில் விவசாயம், வீடுகள் அதிகரித்துள்ளதால், மின் தேவை அதிகரித்துள்ளது. கே என்.பாளையத்திலிருந்து மின்சாரம் இப்பகுதிகளுக்கு மின்கம்பங்கள் மூலம் கொண்டுவரப்படுகிறது. வனப்பதி வழியாக வருவதால் மரங்கள் விழுவதால், மின் கம்பிகள் மரங்களில் உரசுவதாலும் இதுபோல் ஏற்படலாம், அவ்வப்போது மழை பெய்து வந்ததால் ஈரப்பதம் இருந்து வந்தது. அடுத்து கோடைகால தொடங்கினால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சியே ஆக வேண்டும். மின்வாரி அதிகாரிகள் உடனடியாக வோல்டேஜ் ப்ராபளத்தை சரி செய்ய வேண்டும். அடுத்து பழைய மின்கம்பிகளை மாற்றியோ அல்லது கடம்பூர் மலைப்பகுதியில் பொது இடத்தில் பவர் ஹவுஸ் அமைத்து எங்கள் பகுதியில் நிலவும் மின்சாரம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கடம்பூர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story