திருப்பத்தூர் நகரம் புதிய பஸ் நிலையம் அருள்மிகு ஸ்ரீ அரசமரத்து* *வழித்துணை விநாயகர் ஆலய மகா* *கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது*

திருப்பத்தூர் நகரம் புதிய பஸ் நிலையம் அருள்மிகு ஸ்ரீ அரசமரத்து* *வழித்துணை விநாயகர் ஆலய மகா* *கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரம் புதிய பஸ் நிலையம் அருள்மிகு ஸ்ரீ அரசமரத்து வழித்துணை விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் திருப்பத்தூர் நகரம் புதிய பஸ் நிலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அரசமரத்து வழித்துணை விநாயகர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் பம்பை மேலத்தால முழுங்க சிலம்பாட்டம் குதிரை ஆட்டம் நிகழ்ச்சியோடு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது மேலும் இதில் தவத்திரு வைத்தியலிங்கசாமி (எ) பசுமை சித்தர் தீர்த்தமலை மாடாதிபதி கலந்து தொண்டு அனைவருக்கும் ஆசிர்வாதம் வழங்கினார். பின்பு அரசமரம் என்பது புத்தருக்கு ஞானம் கொடுத்தது போதிமரம் தானே அரச மரத்தினை வணங்கினால் சக நவகிரக தோஷங்களும் , நாக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பிறக்கும் என சொற்பொழிவாற்றினார். இந்த நிலையில் இன்று இந்த கோவிலில் யாக சாலைகள் அமைத்து ஹோமங்கள், தீபாராதனை,மூலவருக்கு அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலசத்தின் மீதும் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் மீதும் புனித நீர் ஊற்றபட்டு இந்த கும்மபிஷேக விழாவில் திருப்பத்தூர் மாவட்டம் சுற்றியுள்ள பக்த கோடிகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story