அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

X

போராட்டம்
ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாவந்தூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கல்லூரிக்கு சங்கராபுரம், வானாபுரம், தியாகதுருவம், திருக்கோவிலூர், மணலூர்பேட்டை பகுதியில் இருந்து சுமார் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர் கல்லூரி நேரத்தில் சங்கராபுரம் வானாபுரம் மாடாம்பூண்டி கூட்டுச்சாலை வழியாகவும் தியாகதுருவம் பாவந்தூர் வழியாகவும் கல்லூரி நேரத்தில் அரசு பேருந்து இயக்கப்பட வேண்டும் என கல்லூரியில் படிக்கும் சுமார் 50 மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை ஈடுபட்டனர். மாணவர்களிடையே கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீவித்யா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story