ராமநாதபுரம் பால்வளத்துறை அமைச்சர் பேட்டி

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் வீணாக அரசியல் செய்கிறார்கள்: தமிழகத்தில் மதச்சார்பற்ற ஆட்சி நடைபெறுகிறது பால்வளத்துறை அமைச்சர் பேட்டி
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மதச்சார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்துக்கள் நேற்று முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் வழிபட்டனர். ஆண்டாண்டு காலமாக இரு மதத்தினரும் பிரச்சனை இன்றி வழிபாடு நடத்தி வந்த நிலையில் ஒரு சிலர் திருபரங்குன்றம் மலையை வைத்து வீணாக அரசியல் செய்து வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனியார் பால் விலையை விட அரசு 12 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டுவரப்பட இருக்கிறது, மக்களுக்கு பால் தங்கு தடை இன்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் விரைவில் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும், 2026 இல் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Next Story