ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் மதுபோதையில் தவறி மதுபிரியர் உயிரிழப்பு*

ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் மதுபோதையில் தவறி மதுபிரியர் உயிரிழப்பு*
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் மதுபோதையில் தவறி மதுபிரியர் உயிரிழப்பு* திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பக்கிரி தக்கா பகுதியைச் சேர்ந்த ஜெயகோபி மகன் அருள் (36) இவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று கடையை மூடிவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அருள் பார்சம்பட்டி கிராமத்தில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு மதுபான கடையில் பின்புறம் உள்ள சுதாகர் என்பவருடைய கிணற்றை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று கிணற்றில் சடலம் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிலர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்து சிறிது நேரம் போராடி கிணற்றில் உயிரிழந்த அருளின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மது அருந்தச் சென்ற வாலிபர் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
Next Story