இரணியல் கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது

இரணியல் கைவினை கலைஞருக்கு கவர்னர் விருது
X
குமரி
குமரி மாவட்டம் இரணியல் அருகே நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் மணி(55). இவர் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கோயில் மற்றும் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி பெயிண்ட் அடித்து பழமை மாறாமல் மெருகு ஏற்றி பணி புரிந்து வருகிறார்.        இவரது நிறுவனத்தில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவரது சேவையை பராட்டி  திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெட்டாங்கோடு மணிக்கு சிறந்த கைவினை கலைஞர் விருதினை தமிழக ஆளூனர் ஆர் என் ரவி வழங்கினார். சிறந்த கைவினை கலைஞர் விருதினை பெற்ற நெட்டடாங்கோடு மணியை உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story