மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து வையப்பமலையில் ஆர்ப்பாட்டம்.

X
மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலையில் மத்திய அரசின் 2025.26 கான பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள மக்கள் விரோத பட்ஜெட்டும் தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் நிதி ஒதுக்காமல் பாரபட்சம் காட்டக்கூடிய அரசை கண்டித்தும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவாக்கும் திட்டம். உள்ளிட்ட மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஜி.பழனியம்மாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தேவராஜ் முன்னிலை வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர். எஸ்.தமிழ்மணி.சு.சுரேஷ். ஏளூர் முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதிமணி. முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் தங்கராஜ். ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைசாமி .பூபதிமுருகன். விஜய் மோகனப்பிரியா. மகேந்திரன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

