ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் விவரங்களை இணையதளத்தில் பதிய உத்தரவு

X

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் விவரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவு
திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்துவதற்காக அர சால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் முழு மையாக கடைபிடிக்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது அதில் கலந்து கொள்ளும் காளைகளின் அனைத்து விவரங்களும் இணையதளம் மூலம் பதிவுகள் மேற்கொண்டு டோக்கன் பெற்றுக் கொண்ட பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த மாதம் (பிப்ரவரி) 2025 முதல் நடைபெறவுள்ள அனைத்து ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சி களில் கலந்து கொள்ளும் காளைகள் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ள ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியுள்ள படி காளை உரிமையாளர்கள் அவர்களது ஆதார் அட்டை நகல் மற் றும் காளைகளுக்கான மருத்துவ தகுதி சான்றிதழ் ஆகியவற்றுடன் tiruchirappalli.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவுகள் மேற் கொள்ள வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story