ஆடை வாங்க பணம் தராததால் சிறுவன் தற்கொலை

X
சோமரசம்பட்டை அருகே உள்ள தாயனூர் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் தீச்செல்வம். இவரது மகன் கமலேஷ் (வயது 16). 8-ம் வகுப்பு வரை படித்த இவர் பெயிண்டர் வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் கமலேஷ் ஆன்லைனில் தனக்கு ஆடையை ஆர்டர் செய்துள்ளார். அதை வாங்க தனது பெற்றோரிடம் ரூ.1,000 கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் பணம் தர மறுத்து கமேைலஷ கண்டித்தாக தெரி கிறது. இதனால் மனம் உடைந்த கமலேஷ் வீட்டின் பின்பக்கம் சென்று வயலுக்கு தெளிக்க வைத்திருந்த குருணை மருந்து தின்று மயங்கினார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பல னின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

