ஒன்றிய அரசின் பட்ஜெட் கண்டித்து சி.பி.எம். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசின் பட்ஜெட் கண்டித்து சி.பி.எம். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
ஒன்றிய அரசின் பட்ஜெட் கண்டித்து சி.பி.எம். சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய அரசின் பட்ஜெட் கண்டித்து சி.பி.எம். சார்பில், நகர குழு செயலர் கந்தசாமி தலைமையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய அரசின் பட்ஜெட் கண்டித்து, கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல் உள்பட  பெரும்பாலோர் பங்கேற்றனர். இது குறித்து முருகேசன் கூறியதாவது: ஒன்றிய அரசின் பட்ஜட் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பட்ஜெட். கார்பரேட், பேரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் பட்ஜெட். இதனால் பெரும்பாலோர் பாதிக்கப்படுவார்கள்.
Next Story