விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
X
விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர், பிப்.5- விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசின் பட்ஜெட் நகலை பரபரப்பு ஏற்பட்டது. தமிழக விவசாயிகளை வஞ்சிக்க கூடிய மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு பட்ஜெட்டையும் அறிவிக்காத, விவசாயிகளை வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக இருப்பதாக கூறி மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி திடீரென பட்ஜெட்டை நகலை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகளிர் எரிப்பு போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாநில தலைவர் வாலண்டினா, ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆர் மணிவேல் சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் எம் வெங்கடாஜலம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார். வி.தொ.ச மாவட்ட செயலாளர் கந்தசாமி மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன், சி பி எம் கட்சி செந்துறை வட்ட செயலாளர் அர்ச்சுனன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் இளவரசன், ஒன்றிய செயலாளர் உத்திராபதி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் தனவேல், சேகர், குமார், பெரியசாமி, வேம்பு, பல்கீஸ்,அரசு போக்குவரத்து சிஐடியு நிர்வாகிகள் நீலமேகம், வெங்கடாஜலம், சங்கர், மற்றும் வி.ச நிர்வாகிகள் மனோகரன், ராமமூர்த்தி, கலியமூர்த்தி, காசிநாதன், ஜெயராமன் மற்றும் சிறுபான்மை நலக்குழு மாவட்ட செயலாளர் மைதீன்ஷா மற்றும் அமுதா, அமிர்தவல்லி, புஷ்பா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நகலை தீயிட்டுக் கொளுத்த முயற்சித்த போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story