கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகள் ஆய்வு..

X

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.34 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கபாடி மைதானத்தினையும், கள்ளிக்குடி ஊராட்சியில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2024-2025ன் கீழ் பயனாளியால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1.47 லட்சம் மதிப்பீட்டில் மேலகள்ளிக்குடி முதல் கள்ளிக்குடி மேலதெரு சுடுகாடு வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.
Next Story