பரங்கிப்பேட்டை: கல்லூரிக்கு சென்ற மாணவி காணவில்லை

பரங்கிப்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற மாணவி காணவில்லை என தந்தை புகார் செய்தார்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த பு. முட்லூர் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த துரைசாமி இவரது மகள் சுமதி வயது 18 புவனகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவரை காணவில்லை. இது குறித்து துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுமதியை தேடி வருகின்றனர்.
Next Story