ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில்

உலக நன்மை வேண்டி மகா யாகம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் கிராமத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்ஆலயத்தில், உலக நன்மை வேண்டியும், உலக அமைதிக்காகவும், விவசாயம் செழிக்கவும் மகாயாகம் நடைபெற்றது. பெரிய யாக குண்டம் அமைத்து, 108 மூலிகை பொருட்கள் மற்றும் பழங்கள் கொண்டு மஹா யாகம் நடைபெற்றது. நிறைவாக, யாகம் பூர்ணாஹூதியுடன் நிறைவுற்றது. அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், திருநீறு, பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவிய பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து, ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்தியபடி சிவாச்சாரியார்கள் ஆலயத்தை வலம் வந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story