திருப்பத்தூரில் பிஜேபி அரசு கண்டித்து நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம்

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து மாநிலம் தழுவிய பட்ஜெட் நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு மத்திய தொழிற்சங்ககள் கூட்டமைப்பு சார்பில் மத்திய தொழிற்சங்ககள் முன்வைத்த எந்த ஒரு கோரிக்கையும் நிறைவேற்றாத தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறவும் தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மேலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்ககளின் கூட்டமைப்பு திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் தேவராஜ் வேணுகோபால் கேசவன் தேவராஜ் ஆகியோர் தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் பட்ஜெட் நகல் கிழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த நிகழ்வில் சுந்தரேசன் ஜோதி நாகேந்திரன் முனிராஜ் சாமி கண்ணு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

