கோவை: கட்டிட விபத்து - தொழிலாளி உயிரிழப்பு !

X
கோவை,பேரூர், செட்டிபாளையம் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த ஆறு மாதங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியூரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு தங்கி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்த சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பவர் எதிர்பாராத விதமாக காங்கிரட் சாரம் சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (35) என்பவர் படுகாயமடைந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல அவருடன் வேலையில் ஈடுபட்டிருந்த, படுகாயமடைந்த ஆனந்த் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பேரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

