போக்குவரத்திற்கு லாயக்கற்ற திருவள்ளூர் சாலையால் அவதி

போக்குவரத்திற்கு லாயக்கற்ற திருவள்ளூர் சாலையால் அவதி
X
சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், தினமும் 30,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை வழியாக கிளாய், செங்காடு, வடமங்கலம், வயலுார், தொடுகாடு, மண்ணுார், வளர்புரம் உள்ளிட்ட கிராமத்தினர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.ஸ்ரீபெரும்புதுாரை சுற்றுயுள்ள சிப்காட் தொழில் பூங்காவில் இயங்கி வரும் ஏராளமான தொழிற்சாலைகளுக்கு, ஊழியர்களை ஏற்றி செல்லும் தனியார் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியே சென்று வருகின்றன.ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட திருமங்கையாழ்வார் சந்திப்பில், சாலை நடுவே உள்ள பாதாள சாக்கடை, 'மேன்ஹோல்' மூடி உடைந்துள்ளது. இதனால், பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள், பாதாள சாக்கடை பள்ளத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சாலை சேதமடைந்து பல்லங்குழியாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக காலை - மாலை ‛பீக் ஹவர்' நேரங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால், அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சேதமான பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சரிசெய்து, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story