அஜித் இரண்டு வருடம் கழித்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ள நிலையில் அதனை காண வந்த ரசிகர்கள் ஜாதி மதம் கடந்து ரசிகனாய் குத்தாட்டம் போட்டு கொண்டாடினர்.

X
ராஜபாளையத்தில் அஜித் இரண்டு வருடம் கழித்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ள நிலையில் அதனை காண வந்த ரசிகர்கள் ஜாதி மதம் கடந்து ரசிகனாய் குத்தாட்டம் போட்டு கொண்டாடினர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அஜித் நடித்து இரண்டு வருடங்கள் கழித்து பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த விடாமுயற்சி திரைப்படம் இன்று காலை 9 மணி அளவில் திரையிடப்பட உள்ளது. முன்னதாக தைப்பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு படம் வெளிவராமல் பெரும் ஏமாற்றத்தை அளித்த நிலையில் . இன்று படம் திரையிடப்பட உள்ளதையும் இரண்டு வருடம் கழித்து நடிகர் அஜித்குமாரை திரையில் காண அவரது ரசிகர்கள் ஜாதி மதம் கடந்து ஒன்றிணைந்து குத்தாட்டம் போட்டு வரவேற்றனர். ராஜபாளையத்தில் மூன்று திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் காலை 9 மணி காட்சி சத்திரப்பட்டி வெம்பக் கோட்டை சாலையில் உள்ள ஜெய ஆனந்த் திரையரங்கில் முதல் காட்சி வெளியிடப்பட உள்ள நிலையில் . அங்கு கூடிய அஜித் ரசிகர்கள் வெடி வெடித்து பைக் சாகசம் செய்து குத்தாட்டம் போட்டு கடவுளே அஜிதே எனும் கோசத்துடன் திரையரங்கம் முன்புத்திரண்டு படத்தினை வரவேற்றனர். மேலும் வேலை நாட்களில் படம் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பின்றி இருந்ததினால் திரையரங்கு வழியாக பள்ளி கல்லூரி மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவியினர் சற்று சிரமத்திற்கு ஆளாகி சென்றனர்.
Next Story

