ராஜபாளையம் வீடு புகுந்து மூதாட்டியிடம் நூதன முறையில் திருட்டு !*

X
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வீடு புகுந்து மூதாட்டியிடம் நூதன முறையில் திருட்டு ! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் தெருவில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீடு புகுந்து நூதன முறையில் தங்க நகை கொள்ளை காவல்துறையினர் விசாரணை. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் அடர்த்தியாக வசித்து வரும் கூரை பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இப்பகுதியில் வயது முதிர்ந்த ராமசாமி , காளியம்மாள் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர் இவர்களுக்கு இரண்டு ஆண் இரண்டு பெண் என நான்கு குழந்தைகள் உள்ளனர். நான்கு பேருக்கும் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்தினருடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை ராமசாமி உடல்நிலை சரியில்லாமல் வயது மூப்பு காரணமாக உயிரிழக்கவே 85 வயதான தாய் காசியம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது தேவைகளை நான்கு பிள்ளைகளும் அவ்வப்போது பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ தினமான இன்று மதியம் வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து தன்னை ஒரு பிசியோதெரபிஸ்ட் என அறிமுகப்படுத்திக் கொண்டு மூதாட்டி காசியம்மாளிடம் நன்கு பேசி பின்னர் பிசியோ பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கூறி மூதாட்டி அணிந்திருந்த மூன்று செயின்இரண்டு மோதிரம் நான்கு தங்க வளையல் 2 கம்மல் என சுமார் 15 பவுன் தங்க நகையை நூதன முறையில் திருடி விட்டு தப்பி சென்றுள்ளார். பின்னர் சுதாரித்துக் கொண்ட மூதாட்டி காசியம்மாள் நகை திருடு போனது குறித்து அவர்களது பிள்ளைகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு விரைந்து வந்த பிள்ளைகள் நகை திருட்டு குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் டிஎஸ்பி பிரீத்தி தலைமையிலான காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கள் காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் வீடு புகுந்து மூதாட்டியிடம் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டது ராஜபாளையம் மற்றும் அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story

