தனியார் நிதி நிறுவணம் வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடியதாக புகார்

தனியார் நிதி நிறுவணம் வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடியதாக புகார்
X
*அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டியில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவணம் வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடியதாக புகார்; பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்ய குற்றவியல் நீதிபதி உத்தரவு* *
அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டியில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவணம் வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடியதாக புகார்; பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்ய குற்றவியல் நீதிபதி உத்தரவு மனுதாரருக்கும் இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர்(44). இவரது மனைவி சுதர்சனாதேவி. இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராஜசேகர் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2022 ம் ஆண்டு அருப்புக்கோட்டை அருகே எம்.ரெட்டியபட்டியில் செயல்பட்டு வந்த சனா நிதி லிமிடெட் என்ற தனியார் நிதி நிறுவனம் ராஜசேகரை அணுகி தங்களது நிதி நிறுவனத்தில் பணம் போடுமாறு வங்கியை விட அதிக வட்டி தருவதாகவும் தங்கள் நிறுவனம் அரசால் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் எனவும் கூறியுள்ளனர். இதை நம்பிய ராஜசேகர் முதலில் ரூபாய் 2 லட்சமும் அதனைத் தொடர்ந்து ரூபாய் 5 1/2 லட்சமும் இரண்டு தவணைகளாக அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அதற்காக ராஜசேகருக்கு பாண்டு பத்திரங்களும் தனியாக பாஸ் புக் வழங்கியுள்ளனர். அதில் 2023 ஆம் ஆண்டு பத்திரம் முடிவடையும் என குறிப்பிடப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு ராஜசேகர் அந்த நிதி நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது அந்த நிதி நிறுவனம் மூடப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட முகவர்களிடம் கேட்டபோது தங்கள் பணம் எங்கும் போகாது விரைவில் உங்களுக்கு வந்து விடும் எனக் கூறியுள்ளனர். ஆனால் பணம் வரவில்லை என்பதால் இது குறித்து ராஜசேகர் விசாரித்த போது இதே போல பலரிடம் அந்த தனியார் நிதி நிறுவனம் பணத்தைப் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.‌ இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், அவரது சகோதரர் தவமுருகன் மற்றும் அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜசேகரன், பச்சமால், பெருமாள், சின்ன அப்பனசாமி, மணிகண்டன் மற்றும் அன்பழகன் ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து அந்த நகலை 12.2.25 தேதிக்குள் எப்.ஐ.ஆர் நகலை நீதிமன்றத்தில் ஒப்படைக்க ம.ரெட்டியபட்டி காவல் நிலைய போலீசாருக்கு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்து இசக்கி உத்தரவிட்டுள்ளார். மோசடி செய்த இந்த சனா நிதி லிமிடெட் முதலில் சனா டிரேடர்ஸ் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சனா ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனத்தையும் இறுதியாக சனா நிதி லிமிடெட் என்ற நிறுவனத்தையும் துவக்கி உள்ளது. இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களிடம் மூளைச்சலவை செய்து பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மற்றும் புகார்தாரரான ராஜசேகர் கூறுகையில், சனா நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் என்னை வந்து அணுகி பணத்தை முதலீடு செய்யுமாறு கூறினர். இதனை இயக்குனர்கள் அனைவரும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் அளித்த நம்பிக்கையில் பணத்தை முதலீடு செய்தேன். ஆனால் பணத்தை திரும்ப கேட்டபோது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தேன் அதனை தொடர்ந்து ம.ரெட்டியபட்டி காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் அவர்களும் வந்திருந்தனர் அப்போது பணத்தை தந்து விடுவோம் என கூறினார்கள். ஆனால் கூறியபடி தரவில்லை.‌ என்னுடைய பையனின் மருத்துவ செலவுக்காக தான் இந்த பணத்தை முதலீடு செய்தேன். என்னைப்போல நூற்றுக்கணக்கானோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அளவு மோசடி செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தோடு நின்று விட்டனர் யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை ஆனால் எனக்கு வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தை நாடினேன் என கூறினார். மேலும் இது குறித்து வழக்கறிஞர் கருப்பசாமி கூறுகையில், ராஜசேகர் மற்றும் அவருடன் சேர்ந்து சனா நிதி நிறுவனத்தில் ரூ 10 கோடிக்கு மேல் சனா நிதி நிறுவனத்தில் மோசடி நடைபெற்றுள்ளது. அருப்புக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். இதை எந்த அளவுக்கு ம.ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்வார்கள் என்பது தெரியவில்லை. நீதிமன்ற உத்தரவை மதித்து வழக்கு பதிவு செய்தால் ராஜசேகருக்கு நியாயம் கிடைக்கும்.‌ அரசியல் தலையீடுகள் இருந்தால் முடிவு கிடைப்பது சிரமம். தற்போதைய சூழலில் வழக்கறிஞர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை அதையும் மீறி இந்த வழக்கை நாங்கள் கையில் எடுத்துள்ளோம்.‌ வழக்கறிஞர்களுக்கும் மனுதாரருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Next Story