போலி நகையை அடகு வைக்க வந்த வட மாநிலத்தவர் கைது

X
சென்னை மதுரவாயல் 916 முத்திரையுடன் நகையை அடகு வைக்க வந்த வட மாநில நபர் உஷாரான நகைக்கடை சேட்டு போலி நகையை அடகு வைக்க வந்த நபரை கையும் களமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு. போலி நகையை அடகு வைக்க வடமாநில நபர் நடத்திய நாடகம் திருவள்ளூர் மாவட்டம் , மதுரவாயல் ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் பர்வீன் குமாவாத் இவர் மதுரவாயல் கன்னியம்மன் நகரில் கிருஷ்ணா தங்க நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த 1ஆம் தேதி டிப் டாப்பாக வந்த வடமாநில ஆசாமி ஒருவர் தன் பாக்கெட்டில் வைத்திருந்த தங்க மோதிரத்தை அடகு வைக்க வேண்டும் என கூறியுள ளார் . அப்போது அந்த நகை சுமார் ஆறு கிராம் இருந்ததோடு அதில் 916 முத்திரை பதித்திருந்தது ஆனாலும் வட மாநில நபர் மீது பர்வீன் குமாவத்துக்கு சிறிது சந்தேகம் இருந்ததால் நகையை ஒன்றுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து அது போலியானது என்பதை கண்டறிந்தார். மேலும் அவர் பங்காளதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்து இருக்கலாம் என சந்தேகமடைந்து அந்த நபரிடம் ஆதார்கார்டை கேட்டுள்ளார் அவர் முன்னுக்கு பின் முரனாக் பதில் அளித்ததை அடுத்து அவர்களது அடுகு தொழில் சங்க நண்பர்களை போன் மூலம் கடைக்கு அழைத்துள்ளார் பின்னர் தானியங்கி சென்ஸார் லாக் கதவில் சிக்கிய அந்த நபர் தான் கட்டுமான் பணிக்காக சென்னை வந்ததாகவும் இந்த நகையை அடகு வைத்து கொடுத்தால் இரண்டாயிரம் கிடைக்கும் என கூறியுள ளார் மேலும் ஊரில் உள்ள தனது மனைவிக்கு போனில் அளைத்து சிக்கி கொண்டதை சொல்லி கடைகாரர்களிடம் கொடுத்துள்ளார் அவர் உனது கணவரை போலிசில் ஒப்படைத்து விடுகிறோம் அங்கு அனைத்தையும் கூறு என கூறி தொடர்பை துண்டித்துள்ளானர் நண்பர்களது உதவியுடன் மோசடியில் ஈடுபட முயன்ற நபரை சம்பவம் இடம் வந்த காவல்துறையினர் அந்த நகையை பறிமுதல் செய்ததோடு அதனை அடகு வைக்க முயன்ற நபரை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் மேற்குவங்கம் சவுராங்கி பகுதியை சேர்ந்த ஆதில் உசேன் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந து அந்த நபரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இவர் போலி நகைகளை எங்கேனும் பதுக்கி வைத்துள்ளாரா ? வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சென்னையில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்களா என விசாரித்து வருகின்றனர்.
Next Story

