பாஜக எம்எல்ஏ பேட்டி

X
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, தனது வாக்கினை பதிவு செய்தார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது : பாஜக தேர்தலை புறக்கணித்தாலும் எனது ஜனநாயக கடமையான வாக்களிக்க வந்துள்ளேன். பொதுவாக இந்த இடைத்தேர்தல் 2வது முறையாக நடப்பதால், தேவையற்ற வீண் செலவு ஏற்படுகிறது. மக்கள் வரிப்பணம் வீணாகிறது. மக்களிடமும் உற்சாகம் இல்லை. தேர்தல் அடிக்கடி வருவதால் மக்களுக்கும் சிரமம். எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். ஒரு நாடு ஒரே தேர்தல் கட்டாயம் நடக்கும். அதே நேரத்தில் அசம்பாவித நிகழ்வுகளால் இடைத்தேர்தலை நடத்தி தான் ஆக வேண்டும். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் இறந்து விட்டால், தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சிக்கு தருவது என்றெல்லாம் யோசனை கூறப்படுகிறது. இது குறித்து சட்டம் இயற்றி தான் முடிவு செய்ய வேண்டும். 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வருவது தான் சிறந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் விதிகள் காரணமாக அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. கிழக்கு தொகுதியில் தேர்தல் என்றாலும், மேற்கு தொகுதியில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்
Next Story

