ஏ ஒன் தியேட்டர் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

ஏ ஒன் தியேட்டர் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
ஏ ஒன் தியேட்டர் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி, சேங்கல்பாளையம் காலனி, அருகே உள்ள ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சாமியப்பன் வயது 41. இவர் பிப்ரவரி 4-ம் தேதி மாலை 4 மணி அளவில், பரமத்தி வேலூர்- கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெங்கமேடு ஏ1 தியேட்டர் அருகே வந்தபோது எதிர் திசையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் வேன் டிரைவர் ரவிக்குமார் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சாமியப்பன் ஓட்டி வந்த இருசக்கர மோட்டார் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது விபத்தில் படுகாயம் அடைந்த சாமியப்பனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், சம்பவம் தொடர்பாக சாமியப்பன் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரவிக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story