தொட்டியம் அருகே புதிய குடிநீர் தொட்டி கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

X
தொட்டியம் அருகே உள்ளது நாகையநல்லூர் கிராமம். இக்கிராம மக் கள் நேற்று திருச்சி -நாமக்கல் சாலையில் மேய்க்கல் நாயக்கன்பட்டி என்ற இடத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் நாகையநல்லூர் கிராமத்திலிருந்து காட்டுப்புத்தூர் செல் லும் பழுதான சாலையை சீரமைத்து தரவேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும். நாகையநல்லூரில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் தொடக்க பள்ளிக்கு புதிய கட்டிடத்தை உடனடி யாக கட்டித்தர வேண்டும். நாகையநல்லூர் ஏரிக்கு காவிரி ஆற்றில் இருந்து உபரி நீரை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண் டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டம் குறித்து தகவல் அறிந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா, தொட்டியம் தாசில்தார் சேக்கிழார், முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக் டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித் ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ்கள், கனரக வாகனங்கள் ஏழூர் பட்டி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற் பட்டது.
Next Story

