நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி
X
ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தில் தைத் தேர் திருவிழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்து டன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா வையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு நான்கு உத்திரை வீதிகளில் வலம் வருகிறார். 4-ம் நாளான நேற்று காலை 4.15 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 4.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தார். அங்கிருந்து காலை 5.15 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6.15 மணிக்கு வாகன மண்டபம் வந்தார். பின்னர் அங்கிருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 12 மணிக்கு வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டம் சென்றடைந்தார். வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உத்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 9.30 மணிக்கு கண் ணாடி அறையை சென்றடைந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ந்தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் காலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்ட பத்திற்கு காலை 5 மணிக்கு வருகிறார். காலை 5 மணி முதல் காலை 5.45 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறு கிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களு டன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.
Next Story