அஞ்சுகிராமம் அடுக்குமாடி குடியிருப்புக்கு பஸ் இயக்க கோரிக்கை

X

குமரி
கன்னியாகுமரி அருகே அஞ்சுகிராமம் பேரூராட்சி துணைத் தலைவரும் திமுக வடக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி செயலாளருமான காந்திராஜ் என்பவர் மாவட்ட கலெக்டர் அழகு மீனாவை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்குளம் பகுதியில் தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 418 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் அடுக்குமாடி குடியிருப்பு பொது மக்களுக்கு தேவையான ரோடு, குடிநீர், தெருவிளக்கு வசதிகளை அஞ்சுகிராமம் பேரூராட்சி செய்துள்ளது. மேலும் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் ஆஸ்பத்திரி, ரேஷன் கடை, வங்கி, விஏஓ ஆபீஸ், பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றிற்கு செல்ல சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் வயதானோர் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இரவு நேரங்களில் மிகவும் அச்சத்துடனே இப்பகுதிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை அரசு கலை கல்லூரி, அடுக்குமாடி குடியிருபபு, அழகப்பபுரம், ஜேம்ஸ்டவுன் வழியாக அஞ்சுகிராமத்திற்கு மினி பஸ் இயக்க வேண்டும் என காந்திராஜ் மனுவில் கூறியுள்ளார்.
Next Story