இந்து, முஸ்லிம் இடையே பிரிவினையை உண்டாக்க நினைக்கும் பாஜக நிர்வாகிகளுக்கு

X
திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடதுசாரி அமைப்புகள், பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாகை மாவட்டம் உலகப் புகழ் பெற்ற நாகூர் தர்காவில், தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மாநில நிர்வாகி எச்.ராஜா ஆகியோருக்கு, நல்ல புத்தியை கொடுக்கும்படி நேற்று காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், அண்ணாமலை மற்றும் எச்.ராஜா ஆகியோரின் புகைப்படங்களை வைத்து காங்கிரஸ் கட்சியினர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்து, முஸ்லிம் இடையே பிரிவினையை உண்டாக்க நினைக்கும் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோருக்கு நல்ல புத்தியை கொடுக்கவும், அவர்கள் ஆரோக்கியமான அரசியலை தமிழகத்தில் செய்யவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
Next Story

