பேராவூரணியில் மத்திய நிதி நிலை அறிக்கை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில் நிலையம் எதிரில், கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுக்கள் சார்பில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை எதிர்த்து, வியாழக்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். பேராவூரணி சிபிஎம் ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி முன்னிலை வகித்தார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மூத்த தலைவர் வீ.கருப்பையா, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, மாதர் சங்கம் ஏ.மேனகா மற்றும் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

