சிபிஎம் அகில இந்திய மாநாடு, தஞ்சை மாவட்ட வரவேற்புக்குழு தலைவராக மூத்த தலைவர் என்.சீனிவாசன் தேர்வு 

தேர்வு
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் சரோஜ் நினைவகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அகில இந்திய மாநாடு வரவேற்புக் குழு அமைப்புக் கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் தலைமையில் நடைபெற்றது.  இதில், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், வர்க்க, வெகுஜன அரங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  வரவேற்புக்குழு அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு தலைவராக என்.சீனிவாசன், செயலாளராக சின்னை. பாண்டியன், பொருளாளராக எஸ்.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.  மேலும், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், வர்க்க, வெகுஜன அரங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.  மாநாட்டு நிதி சிபிஎம் தஞ்சை மாவட்டக் குழு சார்பில், மாவட்ட பொறுப்பாளரும், மத்தியக் குழு உறுப்பினருமான உ.வாசுகியிடம் முதல் கட்டமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. தஞ்சையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விசிறி சாமியார் அகில இந்திய மாநாட்டுக்கு நிதி அளித்தார்.
Next Story