தேசிய பசுமை படை இயற்கை முகம் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு துணி பை வழங்கி அனைவரும் கட்டாயமாக துணிப்பை பயன்படுத்த வேண்டும் எனவும் பாலித்தீன் பைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும்
காரை மலையப்பநகர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டுவரை விட பள்ளி இன்று தேசிய பசுமை படை இயற்கை முகம் நடைபெற்றது. நிகழ்வுகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்க ஆசிரியை பேபி வரவேற்று பேசினார். இந்தோ அறக்கட்டளை மேலாளர் செல்வகுமார் நிகழ்வின் முன்னுரை மற்றும் தொகுத்து வழங்கினார் தலைமை ஆசிரியர் பேசும்போது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதோடு தன் சுத்தத்தையும் பேணி காக்க வேண்டும். மரங்கள் அதிகமாக நடப்பட்டு பராமரிக்க வேண்டும் என கூறினார். முத்தமிழ்செல்வன் மரங்கள் நமக்கு உற்ற நண்பன் அவற்றை நாம் தொடர்ந்து நட்டு பாதுகாக்க வேண்டும் மரங்கள் நமக்கு மட்டுமல்ல நாம் பின்னால் வரக்கூடிய சந்ததிகளுக்கும் பயன் தரக்கூடியதாக அமையும். நாம் மரங்களுக்கு எவ்வளவு கொடுமைகள் செய்தாலும் மரங்கள் நம்மை ஒருபோதும் வருத்ததில்லை பாரபட்சம் பார்த்து பயன் அளிப்பதில்லை என கூறினார் நிலத்தடி நீரை பாதுகாக்க நமது ஊரைச் சுற்றி உள்ள நீர்நிலைகளை பராமரிக்க நமது பெற்றோர்களிடம் ஆலோசிக்க வேண்டும் எனவும் கூறினார் இயற்கை விவசாயி போதி பகவான் பேசிய போது நாம் அனைவரும் இயற்கை விவசாயத்தினை ஊக்குவிக்க வேண்டும் ரசாயன உரம் என்றும் பெயரில் நாம் சிறிது சிறிதாக விஷம் கலந்த உணவை உண்டு கொண்டிருக்கிறோம் அது மட்டும் இன்றி மண்ணை மலடாக்கும் என தெரிந்துமே உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம் இத்தகைய ரசாயன உரங்களை தவிர்த்து மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும் எனவும் கூறினார் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கி உண்பதை தவிர்த்து சத்தான ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளான கடலை உருண்டை எள்ளுருண்டை போன்ற தானியங்களில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வாங்கி உண்பதை பழகிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினர் அத்தோடு சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட தின்பண்டங்களை குழந்தைகளுக்கு வழங்கி மகிழ்ந்தார். பின்னர் குழந்தைகளுக்கு துணி பை வழங்கி அனைவரும் கட்டாயமாக துணிப்பை பயன்படுத்த வேண்டும் எனவும் பாலித்தீன் பைகளை முற்றிலுமாக அகற்ற வேண்டும் எனவும் கூறினார்கள். இந்நிகழ்வில் சிகாமணி திவ்யா சமூகப் பணித்துறை பயிற்சி மாணவிகள் சுபா மற்றும் சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story