கழிவு கிடந்தது திட்டமிட்ட செயல் அல்ல; போலீசார் விளக்கம்
திருச்சி வடக்கு தையல்காரத்தெருவில் 15 அடி உயரம், 6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட (2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு) நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ளது. அந்த தொட்டியானது மேல் பகுதியில் சிலாப் போட்டு மூடப்பட்ட நிலையில் உள்ளது. அந்த நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும் தண்ணீர் உப்பு தண்ணீராகும். குடிப்பதற்கு பயன்படுத்த முடியாது. கடந்த 5-ந் தேதி மாலை 4 மணிக்கு மேற்படி மூடிய நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் மேல் பகுதியில் சிலாப்பின் மேல் கழிவுகள் சிறிதளவு இருந்துள்ளது. இதுதொடர்பாக தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். நீர்த்தேக்க தொட்டியில் மலமோ அல்லது கழிவுகளோ கிடப்பதாக தகவல்கள் வந்த நிலையில், இந்த மூடிய நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியின் அருகில் உள்ள 4 அல்லது 5 மாடிகள் கொண்ட உயரமான அடுக்குமாடி குடியிருப்பு களில் 18-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். மேற் படி கழிவினை தொட்டியின் அருகில் உள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் ஏதோ ஒரு குடும்பத்தினர் யாராவது வீசியி ருக்கலாம். கழிவுப்பொருள் கிடந்தது யாரும் திட்டமிட்டு செய்த செயல் அல்ல. இதனை மிகைப்படுத்தி தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
Next Story



