திருச்சியிலும் ஒரு வேங்கைவயல்?
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட, 20வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மனிதக் கழிவுகளை (மலம்) கலந்ததால் பரபரப்பு. நேற்று தண்ணீர் தொட்டியில் யாரோ மேலே ஏறி மர்ம பொருளை போட்டு சென்றதை கவனித்த அப்பகுதி மக்கள் தொட்டியின் மேலே சென்று பார்த்தபோது அது மலம் என்பது உறுதிச் செய்யப்பட்டது. அதையறிந்த வார்டு கவுன்சிலர் எல்.ஐ.சி சங்கர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள், தண்ணீரில் கிடந்த மனித கழிவை அகற்றிவிட்டு தொட்டியை சுற்றி பிளீச்சிங் பவுடர் போட்டுவிட்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story



