ஐம்பெரும் விழா

X
சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளையின் 25 வது ஐம்பெரும் விழா ஈரோடு சக்தி துரைசாமி திருமண மாளிகையில் நடைபெற்றது. லோகலட்சுமி சந்திரசேகர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் முனைவர் பி.சி. துரைசாமி வரவேற்று பேசினார். ஈரோடு, எஸ் கே எம் குழும நிறுவனங்கள் தலைவர் பத்மஸ்ரீ மயிலானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நினைவு பரிசு,சேவை அமைப்புகளுக்கு விருது வழங்கினார்.மேலும், ஈரோடு, வேளாளர் கல்வி நிறுவனங்கள், செயலாளர் மற்றும் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகருக்கு சக்திதேவி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.விழாவில் கோவை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் சிந்தனை கவிஞர் டாக்டர் கவிதாசன் ,அரிமா சங்கத்தின் முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவர் அரிமா என்.முத்துசாமி, ஈரோடு, பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் டாக்டர் எல்.எம்..ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். 2023-24-ஆம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் சேவை அமைப்புகளுக்கு உதவித்தொகை என மொத்தம் ஒரு கோடியே,48,லட்சத்து 64,375 ரூபாய் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, டி.செந்தில்குமார். தீபா செந்தில்குமார், எம்.இளங்கோ, ஜி. வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர்
Next Story

