பனிமூட்டம் காரணமாக சம்பா நெற்பயிர்
நாகை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக அதிக அளவு பனிமூட்டம் காணப்படுகிறது.குறிப்பாக, இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரை நீடிக்கும் பனிமூட்டம் காரணமாக, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி, விவசாய விளைநிலங்கள் முழுவதும் பனிப்போர்வை போர்த்தியது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது. ஏற்கனவே, மழை காரணமாக சம்பா சாகுபடி பெரியதளவு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது நிலவும் பனி காரணமாக மேலும் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள உளுந்து மற்றும் பச்சை பயிர்கள் பூக்கும் தருவாயில் உள்ள சூழலில், பனி காரணமாக அதன் மகசூலும் பாதிக்கும் எனவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story





