தொல்லியல் எச்ச படிமங்களை சேகரித்து சிறப்பாக காட்சிப்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல் 

தொல்லியல் எச்ச படிமங்களை சேகரித்து சிறப்பாக காட்சிப்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல் 
X
தொல்லியல் எச்ச படிமங்களை சேகரித்து சிறப்பாக காட்சிப்படுத்திய ஆசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. 
அரியலூர்,பிப்.7- திருச்சியில் அண்மையில் நடைபெற்ற சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழாவில், அரியலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட எச்ச படிமங்களை சேகரித்து சிறப்பாக காட்சிப்படுத்திய ஆசிரியருக்கு, பாராட்டுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.திருச்சி மாவட்டம் , மணப்பாறையில், அண்மையில் சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா நடைபெற்றது.இவ்விழாவில், அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் அரியலூர் மாவட்டத்தில், கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களை காட்சிப்படுத்தப்பட்டு, அதன் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன. இந்நிலையில், தொல்லியல் எச்ச படிமங்களை சிறப்பாக காட்சிப்படுத்தி விளங்கிய அயன் ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வரலாறு ஆசிரியர் அ.அன்புவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்த ஆட்சியர் பொ.ரத்தினசாமி, அவரை பாராட்டி சான்றிதழை வழங்கினார.இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story