மயிலம் அருகே மது பாட்டல் கடத்தியவர் கைது

X
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்துள்ள,கொல்லியங்குணம் பஸ்நிறுத்தம் அருகே மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த டி.வி.எஸ்.,மொபட்டை நிறுத்தி சோதனை செய்த தில், 40 மது பாட்டில்கள் கடத்த வந்தது தெரியவந்தது.அதனைத் தொடர்ந்து, மொபட்டை ஓட்டி வந்த மேல்மலையனுார் அடுத்த கோட்டைப்பூண்டி கிரா மத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் அஜித்குமார், 26; என்பவரை கைது செய்து மது பாட்டில் மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
Next Story

