நீலாயதாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா

X
நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது நாகை காயாரோகண சாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் கோவில், சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும், அம்மனின் 5 ஆட்சி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இக்கோவிலில், குடமுழுக்கு பெருவிழா வருகிற 10-ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, நாகை மற்றும் திருமருகல் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வருகிற 15 -ம் தேதி அன்று வேலை நாளாக செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story

