ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைப்பெற்ற பொன்னியம்மன் கோவில் பூங்கரக தீமிதி திருவிழா
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைப்பெற்ற பொன்னியம்மன் கோவில் பூங்கரக தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீமித்து நேர்த்தி கடன்.. திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் இன்று பூங்கரக தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது, முன்னதாக கோவில் உள்ள பொன்னியம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து பொன்னியம்மன் பூங்கரக வடிவில் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டபோது, பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற பூங்கரகத்தின் மீது பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை பழத்தை தூவினர்.. அதனை தொடர்ந்து பூங்கரகம் கோவிலை வந்தடைந்ததும், கோவில் வளாகத்தில் தயார் செய்யப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் 3 முறை பூங்கரகம் இறக்கப்பட்டதையடுத்து, பக்தர்களும் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திகடனை செலுத்தினர், மேலும் இந்த பொன்னியம்மன் பூங்கரக தீமிதி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்...
Next Story



