திருப்பத்தூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும், ஆலங்காயம் ஜெயவாசவி பள்ளி பங்குதாரர்களின் சாதி வன்கொடுமை செயலை கண்டித்தும் மற்றும் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாரின் தலித் மீதான தொடர் அராஜக போக்கை கண்டித்து திருப்பத்தூர் தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றிகொண்டான், திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஓம்பிரகாசம் ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர், மா. தமிழ்செல்வன், வேலூர் மண்டல செயலாளர் இரா. சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் பேசிய வன்னியரசு... வேங்கைவயல் மலம் கலந்த பிரச்சனையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையின் விசாரணை அறிக்கையும், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை அறிக்கையும் ஒன்றாகவே அமைந்துள்ளது. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த வழக்கை உடனடியாக சிபிஐ க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் வேங்கைவயல் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை திமுக கூட்டணி சந்தித்தால் மிகப்பெரிய சரிவை சந்திக்க நேரிடம் என பேசினார். இந்ந கண்டன ஆர்பாட்டத்தில் வேலூர் மண்டல துணை செயலாளர் கோவேந்தன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் கோகுல்அமர்நாத், திருப்பத்தூர் நகர செயலாளர் சு. ஆனந்தன்,தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ஆனந்திஇளையராஜா, வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் இயேசுமேரி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story



