ஓலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா. ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பங்கேற்று மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

ஓலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா. ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பங்கேற்று மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.
X
ஓலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா. ஜெயங்கொண்டம் எம் எல் ஏ பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்..
அரியலூர், பிப்.7- ஆண்டிமடம் அருகே ஓலையூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சா.க கண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சா.க கண்ணன் வழங்கினார்.நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் நதியா பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் விஜயராணி ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பேராசிரியர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். முன்னதாக கணித பட்டதாரி ஆசிரியர் அலமேலு மங்கை வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் ரங்க முருகன், பள்ளி துணை ஆய்வாளர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வகுமார், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கலை நிகழ்ச்சியை பட்டதாரி ஆசிரியர் திருப்பதி தொகுத்து வழங்கினார். பள்ளியின் ஆண்டு அறிக்கையை பட்டதாரி அறிவியல் ஆசிரியர் சந்தோஷ் குமார் வாசித்தார்.இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் முடிவில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சிவராம் நன்றி கூறினார்.
Next Story