ராமநாதபுரம் பழுதான ஆம்புலன்ஸ் இயக்குவதால் பொதுமக்கள் அச்சம்

X
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிகழும் வாகன விபத்துக்கள், பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி பெண்கள் உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர் அவசர ஆம்புலன்ஸ் உதவி எண் 108 க்கு அழைத்து கமுதி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள அவசர ஆம்புலன்ஸ் வாகனம் கடந்த 10 நாட்களாக பழுதாகி அவசரத்துக்கு இயக்க முடியாத சூழ்நிலையில் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். மேலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பொதுமக்கள் உதவியுடன் அவசர ஆம்புலன்ஸ் வாகனம் தள்ளிவிடப்பட்டு இயக்கப்படுகிறது. இந்த நிலையில் உள்ள அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை, இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதால் நோயாளிகள் அச்சப்படுகின்றனர். நோயாளிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. செல்லும் வழியில் வாகனங்கள் பாதியில் பழுதானால் நோயாளிகள் உயிர் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கமுதி அரசு மருத்துவமனையில் உள்ள பழுதான 108 அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

