ராமநாதபுரம் அரசு மதுபான கடையை எடுத்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்மதுபான குடிமகன்கள் குமுறல்
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் நாடார்வலசை பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்த கடை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இந்த பகுதியில் எந்தவிதமான சட்ட ஒழுங்கு பிரச்சனையும் நடைபெறவில்லை ஆகையால் அரசு மதுபான கடை இந்த இடத்தில் தொடர்ச்சியாக இயங்க வேண்டும் அப்போதுதான் மதுபான பிரியர்கள் மது அருந்தும் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மகிழ்ச்சி அடைவார்கள் இந்தப் பகுதியில் எந்த விதமான வீடுகளோ குடியிருப்புகளோ இல்லை, சுடுகாட்டுப் பகுதியில் தான் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இதுவரை இந்தப் பகுதியில் எந்தவிதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை அரசுக்கு அதிக வருவாய் தரும் மதுபான கடையாக இயங்கி வருகிறது தனி நபர்கள் மற்றும் நில புரோக்கர்கள் திட்டமிட்டு இந்தப் பகுதியில் உள்ள இடங்களை பிளாட் போடுவதற்காக அரசு மதுபான கடையை எடுக்க கூட்டு முயற்சி செய்து வருகிறார்கள் இப்பகுதியில் உள்ள பெண்களுக்கு பண பட்டுவாடா செய்து அரசு மதுபான கடைகளுக்கு எதிராக போராடத் தூண்டுகிறார்கள் ஆகவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் காவல்துறை சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் அரசு மதுபான கடை இயங்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இந்த கடையை வேறொரு பகுதிக்கு மாற்றினால் எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் சாலையைக் கடந்து பல கிலோமீட்டர் சென்று மதுபான வாங்கி வரும்பொழுது விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும் ஆகையால் பாதுகாப்பாக உள்ள இந்த கடையை இதே இடத்தில் தொடர்ச்சியாக இயங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்த கடையால் யாருக்கும் எந்த பாதிப்புகளும் பிரச்சனைகளோ இது வரை இல்லை என்று அழகன்குளம் பகுதியைச் சேர்ந்த கணேசன் தெரிவித்தார் மேலும் இந்த கடையை வேறொரு பகுதிக்கு மாற்றினால் மதுபான பிரியர்கள் உயிரை விடும் போராட்டம் நடத்துவோம் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர் ஒரு பக்கம் அரசு மதுபான கடையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் குடிமகன்கள் கடை இருக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருவது மது பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
Next Story



